இந்திய தேர்தல் ஆணையம், கடந்த 6 ஆண்டுகளாக எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடாத, அங்கீகரிக்கப்படாத 334 அரசியல் கட்சிகளை அதிகாரப்பூர்வ பட்டியலிலிருந்து நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
இதில் தமிழகத்தை சேர்ந்த 22 அரசியல் கட்சிகளும் அடக்கம். 2019 முதல் 2025 வரையிலான காலப்பகுதியில், தேர்தலில் பங்கேற்காததும், தேவையான சட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததுமாக இருந்த இந்த கட்சிகளின் அலுவலகங்களும், கண்காணிக்க முடியாத நிலையிலும் உள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
நீக்கப்பட்ட கட்சிகள் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 முதல் தேர்தலில் போட்டியிடாத 334 அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் பட்டியலிலிருந்து நீக்கம்
