ஷாங்காயில் பயணம் மேற்கொண்டபோது, செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஈடுபட்டுள்ள 100க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் அடங்கிய ஒரு தொழில் பூங்காவில் ஷிச்சின்பிங் 29ஆம் நாள் முற்பகல் பார்வையிட்டார்.
அப்போது, ஷாங்காய் மாநகரில் செயற்கை நுண்ணறிவு தொழில் வளர்ச்சி நிலவரத்தை அறிந்து கொண்ட அவர், தொழில்நுட்ப ஆய்வு, தொழில் நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் நிர்வாகம் குறித்த அறிமுகத்தைக் கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து, நுண்ணறிவு செயற்கை வளர்ச்சியில் ஷாங்காய் பெற்றுள்ள சாதனைகளை அவர் பாராட்டுவதாக கூறினார்.