துரந்தர் 3 வருகிறதா? ஜியோ ஸ்டுடியோஸ் கொடுத்த ‘சர்ப்ரைஸ்’ அப்டேட்  

Estimated read time 1 min read

ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘துரந்தர்’ மற்றும் அதன் இரண்டாம் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இந்தப் படத்தின் அடுத்த கட்ட நகர்வு குறித்து ஜியோ ஸ்டுடியோஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
படத்தின் இணைத் தயாரிப்பாளர் ஜோதி தேஷ்பாண்டே, “துரந்தர் இன்னும் முடிவுக்கு வரவில்லை” என்று கூறி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளார்.
பாலிவுட் ஹங்காமா தளத்திற்கு அளித்த பேட்டியில் ஜோதி தேஷ்பாண்டே கூறுகையில், “துரந்தர் பயணத்தை நாங்கள் இன்னும் முடிக்கவில்லை. இந்த ஆண்டின் பிற்பகுதியில் ரசிகர்களுக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. அதற்கான வேலைகளில் நாங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்,” எனத் தெரிவித்துள்ளார்.
இது படத்தின் மூன்றாம் பாகத்திற்கான அறிவிப்பாக இருக்குமா என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

You May Also Like

More From Author