2028ஆம் ஆண்டுஒலிம்பிக்கான தகுதிப் போட்டித் தொடரை நடத்தும் 4 நகரங்கள்

Estimated read time 0 min read

2028ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கான தகுதிப் போட்டித் தொடரை நடத்தும் நகரங்களாக, ஷாங்காய், டோக்கியோ, மான்ட்ரியல், ஆர்லாண்டோ ஆகிய 4 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மே 7ஆம் நாள் தெரிவித்தது.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறும் போது மட்டுமல்லாமல், இதர நேரங்களிலும், ஒலிம்பிக் விளையாட்டுகளின் மீதான மக்களின் வரவேற்பைத் தொடர்ந்து நிலைநிறுத்தி, மேலதிக இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக் காலத்தில் ஒலிம்பிக்கான தகுதிப் போட்டித் தொடரைத் தொடங்கியது.

2024ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு முன்னதாக, ஷாங்காய், புடாபெஸ்ட் ஆகிய நகரங்களில் ஒலிம்பிக்கான தகுதிப் போட்டித் தொடர் நடத்தப்பட்டு, நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

You May Also Like

More From Author