தவெக கட்சியின் பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதம் இல்லாமல் ஆட்சி அமைக்க அழைக்க முடியாது என கவர்னர் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இதனால் எஞ்சிய 6 இடங்களுக்காக விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் விஜய் ஆதரவு கேட்டுள்ளார். அவர்கள் இன்று முக்கிய முடிவு எடுக்க உள்ளனர்.
இந்த பரபரப்பான அரசியல் சூழலில் விசிக தலைவர் திருமாவளவன் சென்னை வேளச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தவெகவுக்கு ஆதரவு அளிக்க போகிறீர்களா? என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது;
“தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிப்பது குறித்து ஆலோசிக்க இன்று மாலை விசிக உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெறுகிறது. அரசியல் நெருக்கடி குறித்து இன்று மாலை இணைய வழியாக ஆலோசனை நடைபெற உள்ளது. கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் கருத்துகளை அறிய வேண்டியது எனது கடமை. ஆலோசனை முடிந்த பிறகு எங்களது நிலைப்பாட்டை தெரிவிப்போம். நாளை காலை முடிவு அறிவிக்கப்படும்.”
இவ்வாறு அவர் பேசினார்.
