இவ்வாண்டு, வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்கள், சீனாவில் முதலீட்டைத் தொடர்ந்து அதிகரித்தது, சீனப் பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தின. சர்வதேச வர்த்தக முன்னேற்றத்துக்கான சீனக் கவுன்சில் புதிதாக வெளியிட்ட அறிக்கையின்படி, சீனச் சந்தையின் ஈர்ப்பு ஆற்றல் உயர்ந்து வருகிறது என்று கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 40 விழுக்காட்டுக்கும் மேலான வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்கள் தெரிவித்தன.
ஜூலை திங்கள் சீனத் தேசியப் பொருளாதார நிலைமை பற்றிய அறிக்கையின்படி, ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் அதிகரிப்பு மதிப்பு, கடந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் இருந்ததை விட 5.1 விழுக்காடு அதிகமாகும்.
சேவை துறையின் உற்பத்தி குறியீட்டு எண் ஜுன் திங்களில் இருந்ததை விட 0.1 சதவீதப் புள்ளியை அதிகரித்தது. சிக்கலான சர்வதேச சூழ்நிலை மற்றும் உள்நாட்டில் தீவிரக் காலநிலையின் பாதிப்பு இருந்த போதிலும், சீனப் பொருளாதாரம் சீரான வளர்ச்சி போக்கினை நிலைநிறுத்தி வருகிறது.
புத்தாக்கமானது, தொழில் நிறுவனங்களின் தொடர்ச்சி வளர்ச்சிக்கான முக்கிய இயக்காற்றலாகும். ஜூலை திங்கள் சீனப் பொருளாதார நிலைமையின்படி, சீனாவின் புதிய தர உற்பத்தி ஆற்றல் வலுப்படுத்தப்பட்டு வருகிறது. புதிய இயக்காற்றல், பொருளாதார அதிகரிப்பை முக்கியமாக முன்னேற்றியுள்ளது.
சீனாவில் சீர்திருத்தம் பற்றிய முக்கிய நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருவதுடன், பொருளாதாரத்தின் தொடர்ச்சியான மீட்சியை சீனா முன்னேற்றி, முழு ஆண்டின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி இலக்கை நிறைவேற்றி, உலகத்துடன் வளர்ச்சி வாய்ப்புகளைக் கூட்டாகப் பகிர்ந்து கொள்ளும். இவையே சீனச் சந்தையை வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்கள் உறுதியுடன் தேர்ந்தெடுத்ததற்கு காரணங்கள் ஆகும்.