முன்னாள் மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித், ஜனாதிபதி முகமது முய்சுவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தியா தொடர்பான ஒப்பந்தங்களில் எந்தவொரு தீவிரமான கவலைகளும் இல்லை என்று ஜனாதிபதி ஒப்புக்கொண்டதை அடுத்து, அவர் தனது அரசியல் லாபத்திற்காக ஏமாற்றியுள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
2023 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் போது பொதுமக்களை தவறாக வழிநடத்தி இந்தியாவுக்கு எதிராக தூண்டியதாக, முய்சு முறையான மன்னிப்பு கேட்க வேண்டும் என ஷாஹித் வலியறுத்தி உள்ளார்.
தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, இந்தியாவுடனான பாதுகாப்பு மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்கள் மாலத்தீவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும், இந்திய ராணுவ வீரர்களை நாட்டிலிருந்து நீக்க வேண்டும் என்றும் முய்சு வலியுறுத்தினார்.
முகமது முய்சு இந்தியாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்; மாலத்தீவு எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்
