39வது ஆப்பிரிக்க ஒன்றிய உச்சிமாநாட்டிற்கு ஷி ச்சின்பிங் வாழ்த்து

 

பிப்ரவரி 14ஆம் நாள், ஆப்பிரிக்க ஒன்றியத்தின் நடப்புத் தலைவரும், அங்கோலா அரசு தலைவருமான லூரென்கோ, ஆப்பிரிக்க ஒன்றிய ஆணையத்தின் தலைவர் யூசெஃப் ஆகியோருக்கு, சீன அரசு தலைவர் ஷி ச்சின்பிங் வாழ்த்துச் செய்திகளை அனுப்பி, 39வது ஆப்பிரிக்க ஒன்றிய உச்சிமாநாடு நடைபெறுவது குறித்து ஆப்பிரிக்க நாடுகளுக்கும் மக்களுக்கும் அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

மாறி வரும் சர்வதேச நிலைமையை எதிர்கொண்டுள்ள சீனா, உலக அமைதியை பேணிக்காப்பதற்கும், கூட்டு வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், மனிதகுலத்திற்கான பொது சமூகத்தின் கட்டுமானத்தை மேம்படுத்துவதற்கும் உறுதியாக பணியாற்றும் என்று ஷி ச்சின்பிங் வலியுறுத்தினார். 2026ஆம் ஆண்டு மே மாதம் முதல், சீனாவுடன் தூதண்மை உறவுகளைக் கொண்ட 53 ஆப்பிரிக்க நாடுகளுக்கு வரி விலக்கு நடவடிக்கைகளை முழுமையாகச் செயல்படுத்தும். உயர்நிலைத் திறப்பை விரிவுபடுத்துவதற்கான சீனாவின் புதிய நடவடிக்கை இதுவாகும். ஆப்பிரிக்க வளர்ச்சிக்கும், சீனா மற்றும் ஆப்பிரிக்காவின் நவீனமயமாக்கலை கூட்டாக ஊக்குவிப்பதற்கும் இது புதிய வாய்ப்புகளை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author