ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்த 7வது இந்திய எல்பிஜி கப்பல்: ஈரான் உருக்கமான மெசேஜ்  

Estimated read time 0 min read

மத்திய கிழக்கு நாடுகளில் மோதல் தொடரும் நிலையில், இந்தியாவின் கிரீன் சான்வி என்ற 7வது எல்பிஜி கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியை வெற்றிகரமாகக் கடந்து இந்தியா நோக்கித் திரும்பியுள்ளது.
சுமார் 46,650 மெட்ரிக் டன் எல்பிஜி எரிவாயுவை ஏற்றி வரும் இந்த கப்பலின் வருகையை, குஜராத் துணை முதல்வர் ஹர்ஷ் சங்காவி இந்திய வெளியுறவுத் துறையின் மிகப்பெரிய வெற்றியாகக் கொண்டாடியுள்ளார்.
உலக எரிசக்தி தேவையில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டுள்ள இந்த முக்கிய கடல் வழிப்பாதையை ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், இந்தியாவின் ராஜதந்திர முயற்சிகளால் நமது கப்பல்கள் தொடர்ந்து பாதுகாப்பாக அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
இதுவரை ஆறு கப்பல்கள் இந்தியத் துறைமுகங்களை வந்தடைந்துள்ள நிலையில், 17 இந்தியக் கப்பல்கள் இன்னும் அந்தப் பகுதியில் காத்திருக்கின்றன.

You May Also Like

More From Author