இந்தியாவின் கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) அதிகாரப்பூர்வமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு மாற்றாக மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்ட மசோதாவிற்கு(VB-G RAM-G) குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று தனது ஒப்புதலை வழங்கியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, குடியரசுத் தலைவரின் கையெழுத்தை பெற்றதை தொடர்ந்து தற்போது சட்டமாக மாறியுள்ளது.
மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்திற்குப் பதிலாக, இனி இத்திட்டம் “விக்சித் பாரத் – கிராமின் ரோஜ்கர் அபியான் மற்றும் மகாத்மா காந்தி” (VB-G RAM-G) என்ற பெயரில் அழைக்கப்படும்.
சட்டமானது ‘VB-G RAM-G’ கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம்; குடியரசு தலைவர் முர்மு ஒப்புதல்
