இவ்வாண்டின் முதல் 4 மாதங்களில் சீனாவின் சரக்கு வர்த்தகத்தின் மொத்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மதிப்பு 16.23 டிரில்லின் யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதேகாலத்தை விட 14.9 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று சீன சுங்கதுறை தலைமை நிர்வாகம் 9ஆம் நாள் வெளியிட்ட தகவல் காட்டுகிறது.
ஆசியான் தொடர்ந்து சீனாவின் முதலாவது பெரிய வர்த்தக கூட்டாளியாக திகழ்கிறது. இக்காலக்கட்டத்தில் ஆசியான், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுடனான சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வளர்ச்சி முறையே 15.7 விழுக்காடு மற்றும் 13.2 விழுக்காடாகும். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவின் கூட்டுறவு நாடுகளுடனான சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி 13.5 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளது.
மேலும், சீன-ஆப்பிரிக்க வர்த்தகம் புதிய நிலைக்கு முன்னேற வரி விலக்கு நடவடிக்கை உதவுகிறது. இவ்வாண்டின் முதல் 4 மாதங்களில் ஆப்பிரிக்க நாடுகளுடனான சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மதிப்பு வரலாற்றின் இதேகாலக்கட்டத்தில் 80 ஆயிரம் கோடி யுவானை தாண்டியது இதுவே முதன்முறை. கடந்த ஆண்டின் இதேகாலத்தில் இருந்ததை விட இது 19.4 விழுக்காடு அதிகம்.
