நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு: ஸ்டாலின் கையில் ரிமோட், எடப்பாடிக்கு வேலுமணி கொடுத்த செக்  

Estimated read time 1 min read

தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 என்ற பெரும்பான்மை இலக்கை, 120 இடங்களுடன்(தவெக 107 + கூட்டணி 13) மிக நெருக்கமாகத் தொட்டு தற்போது பதவியேற்றுள்ள விஜய் அரசுக்கு, வரும் மே 13-ம் தேதி நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பு ஒரு மிகப்பெரிய அக்னிப்பரிட்சையாக அமையவுள்ளது.
விஜய்யின் ஆட்சி நீடிக்க வேண்டுமெனில் காங்கிரஸ்-5, இடதுசாரிகள்-4, விசிக-2 மற்றும் முஸ்லிம் லீக்-2 ஆகிய கட்சிகளின் ஆதரவு மிக அவசியம்.
இதில் காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் ‘வெளியில் இருந்து ஆதரவு’ மட்டுமே வழங்கியுள்ளன.
இந்த கட்சிகள் இன்னும் திமுக தலைவர் ஸ்டாலினுடன் இணக்கமான உறவிலேயே இருப்பதால், விஜய்யின் ஆட்சியைக் கவிழ்க்கும் ‘ரிமோட் கண்ட்ரோல்’ மறைமுகமாக ஸ்டாலின் கையிலேயே இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author