வசந்த விழா காலத்தில் பெய்ஜிங் கைவினை நுண்கலை காட்சியகத்தில் அனைவருக்கும் தனித்துவமான கலை விருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
சீனப் புத்தாண்டு – வசந்த விழா பற்றிய இக்கண்காட்சி எண்ணற்ற மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. தேசிய அளவிலான அழகியலுடன் உருவாக்கப்பட்ட இக்கண்காட்சியானது, பாரம்பரிய கலாசாரத்தையும் நவீனக் கலையையும் முழுமையாக ஒருங்கிணைத்து, பார்வையாளர்களை மிக அழகான சீனப் புத்தாண்டிற்குள் அழைத்துச் செல்கிறது. இக்கண்காட்சி அரங்கில் எங்கும் சீனச் சிவப்பு நிறைந்திருப்பதைக் காணலாம். மேலும், “சீனப் புத்தாண்டு” என்னும் சொல்லும் பண்டிகை தொடர்பான அமைப்புகளும் கண்களைக் கவர்ந்து மகிழ்ச்சி அளிக்கும்.
புத்தாண்டுக்கான வாழ்த்துச் செய்யுள், புத்தாண்டு படங்கள், காகிதக் கத்தரிப்பு, விளக்குகள், சிங்கங்கள் முதலியவைகளும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றைப் பல சுற்றுப் பயணிகள் பார்வையிட்டு மகிழ்கின்றனர்.