“எங்கள் தலைவர் எடப்பாடியார் தான்.. நோ கன்ஃபியூஷன்!”… ஆதரவாளர்களுக்கு ஷாக் கொடுத்த எம்பி தனபால்…!!! 

Estimated read time 1 min read

அதிமுகவில் உட்கட்சி பூசல் மீண்டும் வெடிக்கத் தொடங்கியுள்ளதாகப் பேச்சுக்கள் அடிபடும் நிலையில், எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த மாநிலங்களவை எம்பி தனபால் அதிரடியான பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதிமுகவில் தலைமை மாற்றம் வேண்டும் என ஒரு தரப்பினர் கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ளதாகத் தகவல்கள் பரவி வரும் சூழலில், ஈபிஎஸ்-ஐ சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்றும், கட்சிக்குள் எந்தவிதமான குழப்பமும் இல்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மேலும், ஒரு சிலரது தனிப்பட்ட கருத்துக்களைக் கொண்டு கட்சிக்குள் பிளவு இருப்பதாகச் சித்தரிக்க வேண்டாம் எனக்கூறிய அவர், தொண்டர்கள் அனைவரும் எடப்பாடியார் தலைமையின் கீழ் ஒற்றுமையாக இருப்பதாகவும் உறுதிபடக் கூறினார்.

இந்த பேட்டி அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, ஈபிஎஸ்-க்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களுக்கு ஒரு பதிலடியாகவும் பார்க்கப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author