முருக பக்தர்கள் மாநாடு தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் : இந்து முன்னணி மாநிலச் செயலாளர் குற்றாலநாதன்!

Estimated read time 0 min read

முருக பக்தர்கள் மாநாடு தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என இந்து முன்னணி மாநிலச் செயலாளர் குற்றாலநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இந்து முன்னணியினர் வேல் வழிபாடு நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குற்றாலநாதன், தமிழகத்தில் முருக பக்தர்கள் மாநாடு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என கூறினார்.

முருக பக்தர்கள் மாநாட்டினை பார்த்து ஆளுங்கட்சியினர் கதறிக் கொண்டிருக்கின்றனர் எனக்கூறிய அவர், தமிழகத்தில் உள்ள கோயில்களை மீட்கவே முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளதாகத் தெரிவித்தார்.

திமுக தவிர வேறு எந்த கட்சியும் மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனக் குறிப்பிட்ட அவர், மாநாட்டு அழைப்பிதழை முதலமைச்சருக்கு வழங்க நேரம் கேட்டிருப்பதாகக் கூறினார்.

You May Also Like

More From Author