ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு வரும் நீரின் அளவு திடீரென அதிகரித்துள்ளது. கர்நாடகா அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 28 ஆயிரம் கனஅடியில் இருந்து 32 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.
30 நாட்களுக்குப் பிறகு ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க சமீபத்தில் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மீண்டும் தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.