சவுதி அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஹவுத்திகள் ஏவுகணைத் தாக்குதல்!   

Estimated read time 0 min read

ஈரானின் ஆதரவு பெற்ற ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள், செங்கடல் பகுதியில் அமைந்துள்ள சவுதி அரேபியாவின் அரசுக்கு சொந்தமான அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் ஜீசான் மற்றும் யான்பு நகரில் உள்ள தளங்களை இலக்கு வைத்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
ஜீசான் நகரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து அடர்ந்த புகை மண்டலம் எழும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
மேலும், யான்பு நகரை நோக்கி ஏவப்பட்ட இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை சவுதியில் உள்ள கிரீஸ் நாட்டின் பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியுள்ளது.

You May Also Like

More From Author