புதிய மத்திய கல்வி அமைச்சராக பிரஹலாத் ஜோஷி நியமனம்  

Estimated read time 0 min read

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடு சர்ச்சையைத் தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் பதவியிலிருந்து தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார்.
அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடனடியாக ஏற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனையின் பேரில், மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சரான பிரஹலாத் ஜோஷிக்குக் கல்வி அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மறு உத்தரவு வரும் வரை பிரஹலாத் ஜோஷி தனது தற்போதைய பொறுப்புகளுடன் சேர்த்து மத்திய கல்வி அமைச்சகத்தின் செயல்பாடுகளையும் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author