அகிலேஷ் யாதவ் சகோதரர் மரணத்தில் மர்மம்?” – நுரையீரலில் ரத்த உறைவு.. காயங்களுடன் கிடந்த உடல்..! தீவிர விசாரணையில் போலீஸ்.!! 

Estimated read time 1 min read

உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவின் மகனும், அகிலேஷ் யாதவின் சகோதரருமான பிரதிக் யாதவின் திடீர் மறைவு இந்திய அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலமான அவரது உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அதில் வெளியாகியுள்ள தகவல்கள் இந்த மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருக்குமோ என்ற சந்தேகத்தைக் கிளப்பியுள்ளன. குறிப்பாக, அவரது நுரையீரலில் ரத்த உறைதல் (Blood Clotting) இருந்தது கண்டறியப்பட்டுள்ள நிலையில், உடலில் 6 இடங்களில் காயங்கள் இருப்பதும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த காயங்கள் எப்படி ஏற்பட்டது என்பது குறித்துப் போலீஸார் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், இது தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் சதி இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author