தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்..!

Estimated read time 0 min read

தமிழக அரசு நிர்வாகத்தை வலுப்படுத்தும் வகையில், ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றம் செய்து முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த அதிரடி மாற்றத்தின்படி, மூத்த ஐஏஎஸ் அதிகாரி முருகானந்தம் வருவாய் ஆணையராகவும், நந்தகுமார் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், சித்திக் நிதித்துறை இயக்குநராகவும், ஸ்வர்ணா சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறைச் செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, முக்கியத் துறைகளில் அனுபவம் வாய்ந்த அதிகாரிகளைக் கொண்டு நிர்வாகச் சக்கரத்தைச் சுழற்ற முதலமைச்சர் எடுத்துள்ள இந்த ‘ஆக்‌ஷன்’ கோட்டை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, வருவாய் மற்றும் டாஸ்மாக் போன்ற துறைகளில் புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பது, அடுத்தகட்ட அதிரடிகளுக்கு முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author