வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தாலிபானின் தற்காலிக வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகியுடன் முதல் முறையாகப் பேசினார்.
அப்போது, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு காபூல் கண்டனம் தெரிவித்ததையும், ஆப்கானிஸ்தான் வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்புக்கு இந்தியாவின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
தாலிபான்களின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தகியுடன் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் முதல் முறையாக கலந்துரையாடிய நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே “நம்பிக்கையை ஏற்படுத்த” ஆப்கானிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகளை இந்தியா வியாழக்கிழமை வரவேற்றது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்ததற்காக முத்தகிக்கும் ஜெய்சங்கர் நன்றி தெரிவித்தார்.
முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
