அமெரிக்காவின் தென் எல்லைப் பகுதிகளில் அவசர நிலையாக இருக்க அமெரிக்காவின் புதிய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, சட்டவிரோத குடியேறிகள் அமெரிக்காவில் நுழைவதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
தற்போது, அமெரிக்காவின் புதிய அரசு தீர்க்க வேண்டிய உள் விவகாரங்களில், குடியேறிகள் பிரச்சினைக்கு, முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சீன ஊடகக் குழுமத்தைச் சேர்ந்த சி.ஜி.டி.என். தொலைகாட்சி நிலையம் உலகளவில் இணையவழி கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது.
இந்தக் கணக்கெடுப்பு முடிவின் படி, சமீப ஆண்டுகளில், அரசியல் துருவமுனைப்பு, ஏழைகளுக்கும் செல்வந்தர்களுக்குமிடையில் பெரும் இடைவெளி ஆகியவை தொடர்ந்து அதிகரிப்பதோடு, அமெரிக்காவின் சமூக மேலாண்மை சிக்கலில் உள்ளது.
குறிப்பாக, குடியேறிகள், குறிவைக்கப்பட்டனர். வேலை வாய்ப்பை திருடியவர்கள் அல்லது பயங்கரவாதிகள் என அவர்களுக்கு பெரும்பாலும் முத்திரையிடப்பட்டு அழைக்கப்படுகின்றனர். இதனால், குடியேறிகள் அமெரிக்க சமூகத்தைப் பாதித்துள்ளனர் என்ற கூற்று குறித்து கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் 82.9 சதவீதம் பேர் சந்தேகம் தெரிவித்ததோடு, அமெரிக்க அரசின் மோசமான நிர்வாகத்துக்கு, குடியேறிகள் பலிக்கடாக ஆக்கப்பட்டனர் என்று கருத்து தெரிவித்தனர்.
மேலும், குடியேறிகள் பிரச்சினையில் அமெரிக்காவின் இரு கட்சிகளுக்கிடையேயான மோதல் தொடர்ந்தால், சமூ