தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை செளந்தரராஜன், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் இன்று மீண்டும் பாஜகவில் இணைந்தார்.
தமிழிசை சௌந்தரராஜன் கடந்த 25 ஆண்டுகளாக பாஜகவில் உறுப்பினர் மற்றும் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றி வந்துள்ளார்.
இதனால், அவருக்குத் தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் பதவியை பாஜக தலைமை வழங்கியது. தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய 2 மாநிலங்களிலும் ஆளுநராகப் பணியாற்றி நல்ல பெயரை பெற்றார். அவர் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் இன்று மீண்டும் பாஜகவில் இணைந்தார். தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாயம் வந்து அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்டார்.