டிரம்ப் – ஜி ஜின்பிங் நடத்திய மாஸ் மீட்டிங்.. வர்த்தகப் போரில் ஏற்பட்ட ‘மெகா’ உடன்பாடு..!! 

Estimated read time 1 min read

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையே நடைபெற்ற இந்த உயர்மட்ட சந்திப்பு, சர்வதேச அரசியலில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. சுமார் 2 மணி நேரம் 15 நிமிடம் நீடித்த இந்த ஆலோசனையில், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு சார்ந்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, சீனப் பொருட்களுக்கான 60% இறக்குமதி வரியைக் குறைக்க டிரம்ப் விதித்த நிபந்தனைகளை சீனா ஏற்றுக்கொண்டது. இதற்குப் பதிலாக, அமெரிக்க விவசாயிகளிடமிருந்து சோயா பீன்ஸ், மக்காச்சோளம் மற்றும் பன்றி இறைச்சி ஆகியவற்றை பில்லியன் கணக்கான டாலர் மதிப்பில் இறக்குமதி செய்ய ஷி ஜின்பிங் சம்மதம் தெரிவித்தார்.

அதே சமயம், தைவான் விவகாரம் மற்றும் மனித உரிமைகள் உள்ளிட்ட சீனாவின் “நான்கு சிவப்பு கோடுகளை” அமெரிக்கா தாண்டக்கூடாது என ஷி ஜின்பிங் எச்சரித்தார். இதற்குப் பதிலடியாக, ரஷ்யாவிற்கு ராணுவ ரீதியான உதவிகளை வழங்குவதை சீனா நிறுத்த வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தினார்.

இரு வல்லரசுகளும் மோதிக்கொண்டால் உலகம் பெரும் அழிவைச் சந்திக்கும் என்பதை ‘துசிடிடிஸ் பொறி’ விதியைச் சுட்டிக்காட்டி ஷி ஜின்பிங் விளக்கினார். இறுதியில், அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்திற்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்து இந்தப் பேச்சுவார்த்தையை அவர் நிறைவு செய்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author