உதகையில் மலர் கண்காட்சி- 18ம் தேதி உள்ளூர் விடுமுறை

Estimated read time 1 min read

உதகை தாவரவியல் பூங்காவால் வருகிற 18ம் தேதி துவங்குகிறது, பிரசித்தி பெற்ற 128வது மலர் கண்காட்சி முன்னிட்டு 18ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை சீசனான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இவர்களை மகிழ்விக்கும் பொருட்டு உதகை அரசு தாவரவியல் பூங்காவில் வருகிற 18ம் தேதி 128வது மலர் கண்காட்சி தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் மலர் கண்காட்சிக்காக சுற்றுலா பயணிகளைக்‌ கவரும்‌ வகையில்‌ ஜெரேனியம்‌, சைக்லமன்‌, பால்சம்‌ மற்றும்‌ பல புதிய ரக ஆர்னமெண்டல்கேல்‌, ஓரியண்டல்லில்லி, ஆசியாடிக்லில்லி, டேலியாக்கள்‌ மற்றும்‌ பிகோனியா, கேண்டீடப்ட்‌, பிரன்ச்‌ மேரிகோல்டு , இன்காமேரிகோல்டு, பேன்சி, பெட்டுனியா, பிளாக்ஸ்‌, ஜினியா,ஸ்டாக்‌, வெர்பினா. சன்பிளவர்‌, சிலோசியா, ஆன்டிரைனம்‌, டயான்தஸ்‌, ஆஸ்டர்‌, ஜெர்பரா,க்ரைசாந்திமம்‌, டெல்பினியம்‌, சால்வியா, ஆந்தூரியம்‌ போன்ற 275 வகையான விதைகள்‌ மற்றும்‌ செடிகள்‌ ஜப்பான்‌, அமெரிக்கா. ஜெர்மனி மற்றும்‌ நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்தும்‌ இந்தியாவின்‌ பல்வேறு மாநிலங்களிலிருந்தும்‌ பெறப்பட்டு உற்பத்தி செய்யப்பட்ட 10 இலட்சம்‌ மலர் செடிகள் பூங்காவின் பல்வேறு பகுதிகளில்‌ நடவு செய்யபட்ட செடிகளில் பல வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன. மேலும் மலர்க்‌ காட்சியினையொட்டி மலர்கண்காட்சி மாடம்‌ மற்றும்‌ கண்ணாடி மாளிகையில்‌ 50000 வண்ண மலர்த்‌ தொட்டிகள் அடுக்கி வைக்கபட்டு வருகிறது. இந்நிலையில் 128-வது

மலர் கண்காட்சியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்க்கு எதிர் வரும் 18-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஜூன் 6ம் தேதி வேலை நாளாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author