தமிழக அரசியலில் எந்தவித குதிரைப்பேர அரசியலும் இல்லை என்பதை முதலமைச்சர் விஜய் தெளிவுபடுத்த வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
எக்ஸ் பக்கத்தில் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள பதிவில், மதச்சார்பற்ற வெற்றி கூட்டணி சேர்ந்தவர்கள் தவெகவுக்கு நிபந்தனை இல்லாத ஆதரவை அறிவித்துள்ளதாகவும்,
அதேபோல, அதிமுகவில் இருந்து பிரிந்து வந்தவர்களும் தங்களின் ஆதரவை எந்த நிபந்தனையின்றி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
வெளிப்படையாக அறிவிக்கும்போது தான் குதிரைப் பேரம் நடைபெறவில்லை என்பதை மக்கள் நம்புவார்கள் எனவும் கூறியுள்ளார்.
மேலும், முகத்தை மூடிக்கொண்டு வந்தவர் யார் என்பதையும் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும், தமிழக அரசியலில் எந்தவித குதிரைப்பேர அரசியலும் இல்லை என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
