முதலமைச்சர் விஜய் வசம் 16 துறைகள்..! புதிய அமைச்சரவையில் யாருக்கு எந்தெந்தத் துறை..?

Estimated read time 1 min read

புதிய அமைச்சரவையில் யாருக்கு எந்தெந்தத் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்ற விவரம் பின்வருமாறு:

  • முதலமைச்சர் விஜய்:பொதுத்துறை, பொது நிர்வாகம், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகள் தொடர்பான துறைகள், காவல்துறை, உள்துறை, சிறப்பு திட்ட அமலாக்கம், மகளிர் நலம், இளைஞர் நலம், குழந்தைகள் நலம், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் உள்ளிட்ட முக்கிய துறைகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.
  • என். ஆனந்த்: ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் – ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து ஒன்றியம், பாசனத் திட்டங்கள்.
  • ஆதவ் அர்ஜுனா: பொதுப்பணித் துறை (கட்டடங்கள், நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள்), விளையாட்டு மேம்பாட்டுத் துறை.சாலை, கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் உள்ளிட்ட துறைகள் அவரிடம் உள்ளன.
  • கே.ஜி. அருண்ராஜ்: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை.
  • செங்கோட்டையன்: நிதித் துறை (நிதி, ஓய்வூதியங்கள்).நிதித்துறை அமைச்சராகவும், ஓய்வூதியம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொறுப்புகளையும் கவனிக்க உள்ளார்.
  • வெங்கட ரமணன்: உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை.
  • சிடிஆர் நிர்மல் குமார்: மின்சாரம் மற்றும் சட்டத் துறை. மின்சாரம், மாற்று எரிசக்தி, சட்டம், நீதிமன்றங்கள், சிறைத்துறை, ஊழல் தடுப்பு, சட்டப்பேரவை மற்றும் தேர்தல்கள் தொடர்பான துறைகளை கவனிக்க உள்ளார்.
  • ராஜ் மோகன்: பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறை.பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, தகவல் மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் மொழி, கலாசாரம், தொல்லியல் மற்றும் திரைப்படத் துறைகளும் அவரிடம் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • டி.கே. பிரபு: கனிமவளங்கள் மற்றும் சுரங்கங்கள் துறை.
  • கீர்த்தனா:கீர்த்தனா தொழில்துறை மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

You May Also Like

More From Author