சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் மார்ச் 27ஆம் நாள் அமெரிக்காவின் தொழில் மற்றும் வணிக துறை, நெடுநோக்கு மற்றும் கல்வியியல் துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் சந்திப்பு நடத்தினார்.
ஷிச்சின்பிங் கூறுகையில், சீன-அமெரிக்க உறவு, உலகில் மிக முக்கிய இரு தரப்புறவுகளில் ஒன்றாகும். இரு நாடுகளின் தத்தமது வெற்றி, ஒன்றுக்கொன்று வாய்ப்பை வழங்குகிறது. இரு தரப்பும் எதிர் தரப்பை கூட்டாளியாகக் கொண்டு, ஒன்றுக்கொன்று மதிப்பளித்து, சமாதான சகவாழ்வு நடத்தி, ஒத்துழைப்பு மூலம் கூட்டாக வெற்றி பெற்றால்தான், சீன-அமெரிக்க உறவு சீராக இருக்கும் என்று தெரிவித்தார். இவ்வாண்டு இரு நாட்டுத் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 45ஆவது ஆண்டு நிறைவாகும். சீன-அமெரிக்க உறவின் வரலாறு என்பது, இரு நாட்டு மக்களுக்கிடையிலான நட்பார்ந்த தொடர்பின் வரலாறு ஆகும். கடந்த காலத்தில் இரு நாட்டு வரலாற்றை மக்கள் ஏற்படுத்தியுள்ளனர். எதிர்காலத்தில் மக்கள் இதைத் தொடர்வர். இரு நாடுகளைச் சேர்ந்த பல்வேறு துறையினர்கள் பல முறை பரிமாற்றம் மேற்கொண்டு, ஒத்த கருத்துக்களை எட்ட வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.
மேலும், சீனப் பொருளாதாரம் சீராகவும் தொடர்ச்சியாகவும் இருக்கிறது. உயர் தர வளர்ச்சியையும், சீனப் பாணியுடைய நவீனமயமாக்கத்தையும் சீனா தொடர்ந்து முன்னேற்றும். சீன மக்களுக்கு மேலும் சிறந்த வாழ்க்கை நிலைமையைத் தரும் அதே வேளையில், உலகின் தொடரவல்ல வளர்ச்சிக்கு சீனா மேலதிக பங்காற்றும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
சந்தைமயமாக்கம், சட்ட ஒழுங்கு மயமாக்கம் மற்றும் சர்வதேச மயமாக்கம் கொண்ட வணிகச் சூழலை சீனா உருவாக்கி, அமெரிக்க தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்கு மேலும் பரந்துபட்ட வாய்ப்புகளை வழங்கும். சீனாவும் அமெரிக்காவும் பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பை ஆழமாக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
சீனா, தமது வளர்ச்சி இலக்கை நனவாக்கி, உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சி மற்றும் ஒன்றிணைப்பை முன்னேற்றும் என்று அமெரிக்கத் தரப்பு பிரதிதநிகிள் நம்பிக்கை தெரிவித்தினர். அமெரிக்க-சீன பொருளாதார உறவு நெருக்கமாக ஒன்றிணைக்கிறது. இரு நாடுகள் சமாதான சகவாழ்வு நடத்தினால், தத்தமது வளர்ச்சி மற்றும் செழுமையை நனவாக்க முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர்.