ஒத்துழைப்பு என்பது சீன-அமெரிக்க உறவின் முக்கிய அடிப்படையாக வேண்டும்

Estimated read time 1 min read

பதற்றங்களும் மாற்றங்களும் தீவிரமாக ஏற்படும் சர்வதேச நிலைமையில், சீன மற்றும் அமெரிக்க அரசுத் தலைவர்களின் பெய்ஜிங் சந்திப்பு உலகக் கவனத்தை ஈர்த்துள்ளது.

இது குறித்து, சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் நிறுவனம் உலக இணையப் பயனர்களிடையே கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. சீன-அமெரிக்க உறவின் புதிய நிலைப்பாடு பதற்றமான உலகத்துக்கு நிலைப்புத்தன்மையைக் கொண்டு வரும் என்றும், உலகின் நிலையான நிலைப்புத்தன்மையை உத்தரவாதம் செய்யும் முக்கிய முன்நிபந்தனை இதுவாகும் என்றும் இதில் கலந்து கொண்ட 71.6விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர். 

நிலைத்தன்மையுடைய சீன-அமெரிக்க உறவு ஒத்துழைப்பை முக்கிய அடிப்படையாக வைத்துக் கொள்ள வேண்டும். இரு நாடுகளுக்கிடையே போட்டி நிலவுகிறது. ஆனால் போட்டியிடுவதற்கு சரியான அளவில் இருந்தால் தான், இரு நாட்டுறவில் நிலைத்தன்மையைப் பெற முடியும். தத்தமது கவனம் செலுத்தும் முக்கிய பிரச்சினைகளில் இரு தரப்புகளுக்குமிடையே கருத்து வேறுபாடுகள் உண்டு. இவற்றைப் பொருட்படுத்தாமல் இருப்பதைவிட, உரிய நேரத்தில் உகந்த முறையில் கட்டுப்படுத்திக் கையாள வேண்டும் என்பது சீன-அமெரிக்க உறவை நிலைப்படுத்தும் அவசியமான தேவையாகும். அமைதியான உறவு தான் நிலையான நிலைத்தன்மையைக் கொள்ளும். சீன-அமெரிக்க உறவிற்கு இது உண்மை என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author