சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் இன்று விலை மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 1,16,560 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,570 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 15,894 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,27,152 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விளையும் இன்று கிராமுக்கு 5 ரூபாய் வரையில் குறைந்து ஒரு கிராம் 275 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,75,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
