“வாக்குப்பதிவு எந்திரத்தில் அதிரடி மாற்றம்!”.. தலைமை தேர்தல் ஆணையர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்.. இந்த முறை இதெல்லாம் கட்டாயம்..,!! 

Estimated read time 1 min read

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதிகளைத் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்துள்ளார்.

இதன்படி, கேரளா, புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் அடுத்த மாதம் 9-ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 23-ஆம் தேதி ஒரே கட்டமாகவும், மேற்கு வங்காளத்தில் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடைபெறும்.

அனைத்து மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் மே மாதம் 4-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.இந்த 5 மாநிலங்களில் மொத்தம் 17.40 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

மொத்தம் உள்ள 824 தொகுதிகளுக்காக 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, சுமார் 25 லட்சம் தேர்தல் அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 234 தொகுதிகளில் 75,032 வாக்குச்சாவடிகள் தயார் செய்யப்பட்டுள்ளன.

அசாமில் 128, கேரளாவில் 140, புதுச்சேரியில் 30 மற்றும் மேற்கு வங்காளத்தில் 294 தொகுதிகளுக்கு இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.தேர்தல் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களையும் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்குச்சாவடிக்குள் வாக்காளர்கள் செல்போன் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றைப் பாதுகாப்பாக வைக்கத் தனி ஏற்பாடுகள் செய்யப்படும். வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னத்துடன் அவர்களின் வண்ணப் புகைப் படமும் இடம் பெறும்.

மேலும், வாக்குப்பதிவு விவரங்கள் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒருமுறை அதிகாரப்பூர்வமாகப் பகிரப்படும் என்றும், அனைத்து வாக்குச்சாவடி முகவர்களுக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author