2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு டொனால்ட் டிரம்பிற்கு கிடைக்கவில்லை.
இதனால் அமெரிக்கா-நோர்வே உறவுகளில் ஏற்படக்கூடிய விளைவுகளை எதிர்கொள்ள நார்வே அரசியல்வாதிகள் தயாராகி வருகின்றனர்.
டிரம்பின் காசா திட்டத்தின் கீழ் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர்நிறுத்தம் ஏற்படுவதற்கு பல நாட்களுக்கு முன்பே, இந்த ஆண்டுக்கான பரிசு பெறுபவரை ஏற்கனவே முடிவு செய்துவிட்டதாக நோர்வே நோபல் குழு தெரிவித்துள்ளது.
காலக்கெடு மற்றும் குழுவின் கட்டமைப்பை கருத்தில் கொண்டு, டிரம்ப் நோபல் பரிசை வெல்வது சாத்தியமில்லை என்று முன்னரே நிபுணர்கள் கூறினர்.
டிரம்ப் எதிர்பார்த்த நோபல் பரிசு மிஸ்! அவரது ரியாக்ஷனை எதிர்கொள்ள தயார்நிலையில் நார்வே
