சாதீ

Estimated read time 0 min read

Web team

r.jpg

அணையட்டும் சாதீ ! கவிஞர் இரா .இரவி !

விலங்கிலிருந்து மனிதன் வந்தது பரிணாம வளர்ச்சி
விலங்காக மனிதன் மாறுவது பரிணாம வீழ்ச்சி !

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழகத்தில்
சங்கம் வைத்து சாதி வெறி வளர்க்கும் அவலம் !

சொந்த புத்தியின்றி சொல்புத்திக் கேட்கும் கொடுமை
சோகத்தில் ஆழ்த்தி மகிழ்ந்திடும் கொடூர மடமை !

பெற்ற மகளை விட உனக்கு உன் சாதி பெரிதா ?
பெற்ற மகனை விட உனக்கு உன் சாதி பெரிதா ?

சாதிமத வெறியால் மாண்ட உயிர்கள் போதும்
சாதிமத வெறி உடன் மாண்டால் போதும் !

எதையும் ஏன் ? எதற்கு ? எப்படி எதனால் ? என சிந்தி
எவனோ சொன்னதற்காக கூலிப்படையாகலாமா ?
விலை மதிப்பற்றது மனித உயிர்கள் உணர்ந்திடு
வீண் வீம்புக்கு உயிர் பறிப்பதை நிறுத்திடு !

உன் சாதியால் மட்டும் ஒரு நாள் வாழ முடியுமா ?
ஒட்டு மொத்த சாதியின் பங்களிப்பே உன் வாழ்வு !

உன் சாதிக்கு என்று தனி ரத்தமா ஓடுது ?
உனக்கு உயிர் காக்க உதவிய உதிரம் எந்த சாதி ?

விலங்குகள் கூட அன்பு செலுத்தி வாழுதடா
வெட்டி மனிதர்கள் தான் வெட்டி வீழ்கின்றனர் !

சாதீயை வளர விடுவது தமிழகதிற்கு அவமானம்
சா தீயை மனிதநேயம் தண்ணீரால் அணைத்திடுவோம்

சகோதரர்களாய் அனைவரும் கூடி வாழ்வோம்
சாதி எனும் தீயை அணைக்க வீரர்களாய் மாறுவோம் !

Please follow and like us:

You May Also Like

More From Author