தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்..!

Estimated read time 0 min read

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதில் இருந்து நிர்வாக வசதிகளுக்காக ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் அவ்வபோது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.அதன்படி, பல்வேறு துறைகளை சேர்ந்த 8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் தஸைமைச் செயலர் சாய் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகளின் விவரம்:

அதிகாரியின் பெயர் வகித்து வந்த பதவி புதிய பதவி
சுன்சோனுகம் ஜடக் செரு பொதுப்பணிகள் துறை முதன்மைச்் செயலர் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலர்
ஆர்.செல்வராஜ் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலர் பொதுப்பணிகள் துறை முதன்மைச்் செயலர்
சந்தீப் நந்தூரி தொழில், முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சிறப்பு செயலர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலர்
பி.உமா மகேஸ்வரி மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரிய தலைவர் கைத்தறி துறை இயக்குநர்
எம்.பிரதீப் குமார் நகராட்சி நிர்வாகத துறை இயக்குநர் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை இயக்குநர்
ஆர். அழகுமீனா சுகாதாரத் துறை துணை செயலர் மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரிய தலைவர்
ஆர். சுரேஷ் குமார் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் தமிழ்நாடு காதி மற்றும் கிராம தொழிலக வாரியத்தின் தலைமை செயஸ் அதிகாரி
சித்ரா விஜயன் சென்னை மாநகராட்சி வடக்கு மண்டல துணை ஆணையர் சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (வருவாய் மற்றும் நிதி)

You May Also Like

More From Author