கனேடிய தேர்தலில் சீனா தலையிட முயன்றது ஆனால் முடிவுகளை அதன் தலையீட்டால் மாற்ற முடியவில்லை: ட்ரூடோ

கனேடிய தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடு இருப்பதாக சமீபத்தில் பெரும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதற்கான விசாரணை நடந்து வரும் நிலையில், மற்ற நாடுகளின் தலையீடு இருந்தபோதிலும், தேர்தல்கள் “சுதந்திரமாகவும் நியாயமாகவும்” நடந்ததாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

கடந்த இரண்டு கனேடியத் தேர்தல்களில் சீனா தலையிட முயன்றது, ஆனால் சீனாவால் முடிவுகளை மாற்ற முடியவில்லை.
மேலும், சீனா ஒரு அரசியல் கட்சியை விட மற்றொரு அரசியல் கட்சியை விரும்புவது “சாத்தியமற்றது” என்றும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

2019 மற்றும் 2021 கனேடிய தேர்தல்களில் சீனா தலையிட்டிருக்கலாம் என்று தெரிவிக்கும் அறிக்கைகளை விசாரிக்க கூட்டப்பட்ட கூட்டத்தில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இதை தெரிவித்துள்ளார்.

You May Also Like

More From Author