நேரடி அந்நிய முதலீட்டுக்கான நம்பிக்கையைப் பெற்ற சீனா

2024ஆம் ஆண்டு உலக அளவில் நேரடி அந்நிய முதலீட்டுக்கான நம்பிக்கை குறியீடுகள் பற்றிய அறிக்கையை, கியர்னி என்னும் உலகளாவிய மேலாண்மை ஆலோசனைக்கான புகழ் பெற்ற நிறுவனம் அண்மையில் வெளியிட்டது.

இவ்வறிக்கையின்படி, சீனா கடந்த ஆண்டில் இருந்த 7ஆவது இடத்திலிருந்து 3ஆவது இடத்துக்கு உயர்ந்துள்ளது. அமெரிக்கா மற்றும் கனடா முதல் 2 இடங்களைப் பிடித்துள்ளன.


மேலும், அடுத்த 3 ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு மிகப் பெரும் ஈர்ப்பு ஆற்றல் கொண்ட 25 புதிய சந்தைகளில், சீனா முதலிடத்தை வகிக்கிறது. 2024ஆம் ஆண்டு, புதிய சந்தைகளில் புதிய முதலீட்டு வாய்ப்புகளை நாடுவார்கள் என்று கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 84 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.


உயர்வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்ற செயற்கை நுண்ணறிவு, முதலீட்டாளர்களின் கவனத்தையும், அதிகமான முதலீடுகளையும் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author