டிட்வா புயலின் தாக்கத்தால் தமிழ்நாடு முழுவதும் கனமழை கொட்டி வருகிறது. டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூரில் பெய்த தொடர் மழையால் சுமார் 1.35 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
மேலும், கடல் சீற்றம் காரணமாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் கடந்த இரு நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது.
பலத்த காற்று மணிக்கு 55 முதல் 60 கிமீ வேகத்தில் வீசியதால், பாம்பன் பாலத்தில் இரண்டாவது நாளாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
ராமேஸ்வரத்தில் விசுவாச நகர் உள்ளிட்ட குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
வேதாரண்யம் பகுதியில் சுமார் 9,000 ஏக்கர் உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கின.
டிட்வா புயல் கோரத் தாண்டவம்: 1.35 லட்சம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின
