சித்திரை திருவிழா காலத்தில் மதுரையில் இருக்கும் பாக்கியம் பெற்றேன் : அமித் ஷா

சித்திரைத் திருவிழா காலத்தில், மதுரையில் இருக்கும் பாக்கியம் பெற்றதாக மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மதுரை பாஜக வேட்பாளர் ராம.சீனிவாசனுக்கு ஆதரவாக, மதுரையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சி மூலம் மக்களிடம் ஆதரவு திரட்டினார்.

மதுரை நேதாஜி சாலையில் முருகன் கோவில் அருகில் இருந்து தொடங்கிய வாகனப் பேரணி, ஆவணி மூல வீதி வழியாக சென்று நிறைவடைந்தது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் தனது எக்ஸ் பதிவில், அதிமுக, திமுக ஆட்சியில் நடந்த மாபெரும் ஊழல்களால் மதுரையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது.  பா.ஜ.க.வுக்கு வாய்ப்பளிக்கவும், தாமரையை மலரச் செய்யவும், மோடி உத்தரவாதத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என மதுரை மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், “சித்திரைத் திருவிழா காலத்தில் மதுரையில் இருக்கும் பாக்கியம் பெற்றேன். தமிழகத்தில் உள்ள  சகோதர, சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

You May Also Like

More From Author