பங்களாதேஷில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தலைநகர் டாக்காவில் நேற்று இரவு நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 21 வயது இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தலைநகர் டாக்காவின் மோக்பஜார் பகுதியில் உள்ள மேம்பாலத்தின் மேலிருந்து மர்ம நபர்கள் சக்திவாய்ந்த நாட்டு வெடிகுண்டு ஒன்றை வீசித் தாக்குதல் நடத்தினர்.
இந்த குண்டு சரியாக அந்தப் பகுதியில் தேநீர் அருந்தி கொண்டிருந்த சைபுல் சியாம் என்ற இளைஞரின் தலையில் விழுந்து வெடித்தது.
இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உயிரிழந்த சியாம், அப்பகுதியில் உள்ள கார் அலங்காரக் கடையில் பணியாற்றி வந்தவர்.
வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை: பெட்ரோல் குண்டு வீசியதில் இளைஞர் பலி
