இஸ்ரேல் மீது பதிலடித் தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருவதை தொடர்ந்து, மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளதால் ஏர் இந்தியா விமானங்கள் ஈரானிய வான்வெளிக்குள் செல்வதை இன்று தவிர்த்தன.
ஈரானிய வான்வெளியைத் தவிர்ப்பதற்காக ஏர் இந்தியா விமானங்கள் ஐரோப்பாவிற்கு நீண்ட தூரம் பயணித்து சென்றதாக கூறப்படுகிறது.
சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரக வளாகத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி நடந்த வான்வழித் தாக்குதலுக்குப் பழிவாங்குவதாக ஈரான் சபதம் செய்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் ஒரு உயர்மட்ட ஈரானிய ஜெனரல் மற்றும் ஆறு ஈரானிய இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
தனது தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தன் நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாக ஈரான் பார்க்கிறது.