அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் பொதுக்குழுவை கூட்ட வேலுமணி தரப்பு தீவிரம் காட்டிவருகிறது.
அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்கள் சி.வி.சண்முகம்,வேலுமணி,விஜய்பாஸ்கர் தரப்பு அவசரப்பட்டு தவெகவை ஆதரிப்பது என்று எடுத்த முடிவால் இன்று அதிமுக கட்சிக்குள் குழப்பங்கள் மட்டுமே உண்டாகி பிளவுபட்டு நிற்கிறது.
அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் பொதுக்குழுவை கூட்ட வேலுமணி தரப்பு தீவிரம் காட்டிவருகிறது. சி.வி.சண்முகம், எஸ்.பி. வேலுமணி தரப்பு கேட்டால் பொதுக்குழுவை கூட்ட ஆதரவாக கையெழுத்து போட வேண்டாம் என ஈபிஎஸ் தெரிவித்திருந்த நிலையில், எஸ்.பி.வேலுமணி ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களிடம் கையெழுத்து பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தமுள்ள 1800 பொதுக்குழு உறுப்பினர்களில் 1,050 பேர் பொதுக்குழுவை கூட்ட கையெழுத்திட்டுள்ளனர். 59% உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதால் பொடுக்குழுவை கூட்ட எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் கொடுக்க திட்டமிட்டுள்ளார். ஈபிஎஸ், ஆளுநர் சந்திப்பு தாமதம் ஏற்படுவதால், பொதுக்குழுவை கூட்ட பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து வேட்டை நடத்துகிறது வேலுமணி தரப்பு. ஆதரவாளர்களை தங்கள் பக்கம் இழுக்க CV சண்முகம் தரப்பு தீவிரமாக இருப்பதால், சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து, தேவைப்பட்டால் தேர்தல் ஆணையத்திடம் முறையிடும் வகையில் பிளான் B-ஐ ஈபிஎஸ் தயார் செய்துவருகிறார்.
