அதிமுகவில் இருந்து விலகுகிறேன் – முன்னாள் அமைச்சர் செம்மலை அறிவிப்பு!

Estimated read time 0 min read

அதிமுகவில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் செம்மலை அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள் மிகுந்த மன வேதனையை உண்டாக்கி விட்டதாக தெரிவித்துள்ளார்.

நடந்த சம்பவங்கள், நடக்கும் சம்பவங்கள் எதுவுமே திருப்தி அளிப்பதாக இல்லை என்றும், இதே மனநிலையில் தான் லட்சக்கணக்கான தொண்டர்களும் இருந்து வருகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

எம்.ஜி.ஆர் உருவாக்கிய இயக்கம், ஜெயலலிதா காப்பாற்றிய இயக்கத்திற்கு இந்த கதியா? என்றும் செம்மலை கேள்வி எழுப்பியுள்ளார்.

You May Also Like

More From Author