தமிழகத்தில் இன்றும் (ஆகஸ்ட் 26), நாளையும் (ஆகஸ்ட் 27) இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இதே போல் மழை வாய்ப்பு நிலவுகிறது.
வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையின் படி, கடந்த 24 மணி நேரத்தில் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் அதிகபட்சமாக 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மேலும், கடலூர் மாவட்டத்தில் சேத்தியாத்தோப்பு மற்றும் சிதம்பரம் பகுதிகளில் தலா 5 செ.மீ., புவனகிரி மற்றும் அண்ணாமலை நகர் பகுதிகளில் தலா 4 செ.மீ. மழை பெய்தது.
