சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாடு முதல் இதுவரை, சீனாவில் நிறைவேற்றப்பட்ட காடு வளர்ப்பு பரப்பளவு 6 லட்சத்து 80 ஆயிரம் சதுர கிலோமீட்டராகும். தற்போது, நாட்டின் காடு வளர்ப்பு பரவல் நிலப்பரப்பு 21.63 விழுக்காட்டிலிருந்து 24.02 விழுக்காடாக உயர்ந்துள்ளது. செயற்கை காடுகள் பரப்பளவு 8 லட்சத்து 76 ஆயிரம் சதுர கிலோமீட்டரை எட்டி, உலகத்தின் முதலிடத்தை வகிக்கிறது. மேய்ச்சல் நிலத்தின் பரப்பளவு சுமார் 26 லட்சத்து 36 ஆயிரத்து 666 சதுர கிலோமீட்டரை எட்டி, உலகத்தின் முதலிடத்தை வகிக்கிறது.
மேலும், மணல் காற்று தடுப்பு மற்றும் மணற்பாங்கான நில கட்டுப்பாட்டுப் பணியில், சீனா நிறைவேற்றிய நிலப்பரப்பு சுமார் 2 லட்சத்து 3 ஆயிரத்து 333 சதுர கிலோமீட்டராகும்.
சீனத் தேசிய பூங்காக்களின் கட்டுமானம், உயிரின நாகரிக கட்டுமானத்திலுள்ள முக்கிய பகுதியாகும். உலகத்தின் மிகப் பெரிய தேசிய பூங்காக்கள் அமைப்புமுறையை சீனா கட்டியமைத்து வருகிறது. மேலும், தேசிய பூங்காக்களை முக்கிய பகுதியாக கொண்ட இயற்கை பாதுகாப்பு இடத்தின் அமைப்புமுறையின் உருவாக்கம் விரைவுபடுத்தப்பட்டு வருகிறது.
இதுவரை, சீனாவில் பல்வேறு நிலைகளிலான பல்வகை இயற்கை பாதுகாப்பு இடங்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. உலக இயற்கை மரபுச் செல்வங்களின் எண்ணிக்கை 15 ஆகும். மேலும், உலக நிலவியல் பூங்காக்களின் எண்ணிக்கை 47 ஆகும்.