சர்வதேச நாணய நிதியத்தின் ஷாங்காய் மையம் டிசம்பர் 8ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது. சர்வதேச நாணய நிதியம் உலகளவில் புதிதாக அமைக்கப்பட்ட பிராந்திய மையம் ஒன்றாக இது திகழ்கின்றது. சர்வதேச நாணய நிதியத்துக்கும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பொருளாதாரங்களுக்கும் இடையேயான பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த இது துணைபுரியும்.
புதிதாக வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் நடு தர வருவாய் கொண்ட நாடுகளின் பொது அக்கறை கொண்ட அம்சங்கள் குறித்து இந்த மையம் ஆய்வுப் பணி மேற்கொள்ளும். பிராந்தியத்தில் உள்ள பொருளாதாரங்களின் தேவைக்கு இணங்க, ஷாங்காய் மையம் அவற்றுக்கு திறன் மேம்பாட்டு ஆதரவுகளை வழங்கி, உலகளாவிய மற்றும் பிராந்திய நிதி துறையின் நிலைத்தன்மையைப் பேணிக்காக்கும்.
