உலகளாவிய வலைப்பதிவர்கள் கூட்டு படைத்தல் மற்றும் தகவல் தொடர்பு பிரச்சார நிகழ்வு சின்ஜியாங்கில் துவக்கம்

Estimated read time 0 min read

சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேச அரசின் தகவல் தொடர்புப் பணியகமும், சீன ஊடகக் குழுமமும் கூட்டாக ஏற்பாடு செய்த “சின்ஜியாங் வைப்ஸ்” என்ற தலைப்பிலான உலகளாவிய வலைப்பதிவர்கள் கூட்டு படைத்தல் மற்றும் தகவல் தொடர்பு பிரச்சார நிகழ்வுமே 18ஆம் நாள் சின்ஜியாங்கின் இலி கசாக் இனத் தன்னாட்சிச் சோவில் துவங்கியது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ரஷியா, ஸ்வீடன், பரிட்டன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த புகழ்பெற்ற வலைப்பதிவர்கள், சீன ஊடகக் குழுமத்தைச் சேர்ந்த வலைப்பதிவர்கள் உள்ளிட்ட சுமார் 70 விருந்தினர்கள் துவக்க விழாவில் கலந்து கொண்டனர்.

அடுத்த சில நாட்களில், வலைப்பதிவர்கள் சின்ஜியாங்கில் பயணம் மேற்கொண்டு, பல்வேறு தனிச்சிறப்புடைய நிகழ்ச்சிகளின் மூலம், சின்ஜியாங்கின் இயற்கை காட்சிகள், பண்பாடு மற்றும் வளர்ச்சியின் உயிராற்றல் பற்றி இணையத்தில் பதிவு செய்ய உள்ளனர்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசக் குழுவின் பரப்புரை துறை துணைத் தலைவர் ச்சென் சுவேய்லியாங் துவக்க விழாவில் கூறுகையில், பரந்த நிலப்பரப்புடைய சின்ஜியாங்கின் காட்சிகள் மிகவும் அழகானவை. மக்களும் இயற்கையும் இணக்கமாக வாழ்கின்றனர். நீண்டகாலமாக, சின்ஜியாங்கின் பல்வேறு தேசிய இன மக்கள் சுமுகமாக வாழ்த்து வருகின்றனர் என்றார். மேலும், உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் சின்ஜியாங்கில் பயணம் மேற்கொண்டு, இங்குள்ள ஈர்ப்பு ஆற்றல் மற்றும் தனிச்சிறப்புடைய பாணிகளை உணர்ந்து கொள்வதை வரவேற்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author