ஐ.நா மனித உறைவிடத் திட்ட அலுவலக இயக்குநர் ரோஸ்பாஹ் அம்மையார் அண்மையில் கென்யாவின் தலைநகர் நைரோபியில் அமைந்துள்ள இந்த அலுவலகத்தின் தலைமையகத்தில் சீன ஊடகக் குழுமத்துக்குப் பேட்டியளித்தார்.
தன்னுடைய பேட்டியில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு 2024ம் ஆண்டில் மீண்டும் சீனாவுக்கு வருகை தந்ததை நினைவுகூர்ந்த அவர், சீனாவில் உயிராற்றல் மிக்க தூய்மையான நகரங்களைப் பார்த்தேன்.
இப்பயணத்தில் 2 சிறப்புகளால் ஈர்க்கப்பட்டேன். முதலாவதாக, நகரிலுள்ள கட்டிடங்கள் உரிய முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இரண்டாவதாக, பழைய தொழில் துறை மண்டலம் 40 கிலோமீட்டர் நீளமுள்ள பூங்கா மண்டலமாக சீரமைக்கப்பட்டுள்ளது.
இது போன்ற சீரமைப்பு பணிகளின் மூலம், பொது மக்கள் பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகளைப் பெறுவதோடு, பொது இடங்களையும் அதிகளவில் பயன்படுத்தி, மனித குலத்துக்கும் -இயற்கைக்கும் இடையிலான இணக்கமான சகவாழ்வை நனவாக்கலாம் என்று கூறினார்.
மேலும், சீனாவின் நகரங்கள் பின்பற்றி வரும் மனிதர்களே முதன்மை என்ற கருத்து, நகரங்கள் அனைத்தும், வளர்ச்சி பெறுவதற்கு அவசியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
