தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான லோகேஷ் கனகராஜ், தெலுங்கு திரையுலகின் ‘ஸ்டைலிஷ் ஸ்டார்’ அல்லு அர்ஜுனுடன் கைகோர்க்கும் தனது புதிய திரைப்பட அறிவிப்பை பொங்கலை ஒட்டி இன்று வெளியிட்டுள்ளார்.
தற்காலிகமாக ‘AA23’ மற்றும் ‘LK7’ எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படம் குறித்த அறிவிப்புடன் ஒரு சிறப்பு டீசரையும் அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
வெளியாகியுள்ள டீசர் வீடியோவில், அடர்ந்த காட்டின் வழியே ஒரு நபர் குதிரையில் செல்வதும், அவைக் கண்டு சிங்கங்கள் மற்றும் ஓநாய்கள் அஞ்சி ஒதுங்குவதும் போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இது ஒரு அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என்பதை டீசர் உணர்த்துகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன்: #AA23 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு
