தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: புதிய 23 அமைச்சர்களின் முழு பட்டியல் வெளியீடு  

Estimated read time 1 min read

தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று காலை 10 மணிக்கு முதன்முறையாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
கடந்த 10-ஆம் தேதி முதல்வருடன் சேர்த்து 10 பேர் மட்டுமே பொறுப்பேற்றிருந்த நிலையில், இன்று ஒரே நாளில் மேலும் 23 புதிய அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாக ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சென்னை லோக் பவனில் (ஆளுநர் மாளிகை) நடைபெறும் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விழாவில், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் புதிய அமைச்சர்களுக்குப் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைக்க உள்ளார்.
இந்த விரிவாக்கத்தின் மூலம் தமிழக அமைச்சரவையின் மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர உள்ளது.

You May Also Like

More From Author