வெங்காடம்பட்டி சாதனை மாணவிக்கு பாராட்டு

Estimated read time 0 min read

ஆலங்குளம். மே.22

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வெங்காடம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணவி சர்மிதாவுக்கு பாராட்டுகள் குவிகிறது

தேசிய திறனாய்வுத்
தேர்வில் சாதனை படைத்துள்ள வெங்காடம்பட்டி மாணவி சர்மிதா புனித அருளப்பர் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா வெங்காயம்பட்டி கிராமம் சமையல்கலை சிலம்புக்கலை, இரத்ததான சேவை முதியோர் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு இல்லங்கள் என புகழ்பெற்ற கிராமம்

இங்கு சந்தைக்கடை சமையல் அதிபரான வேவெற்றிவேல்முருகன் மகள்
வெ. சர்மிதா
தேசிய திறனாய்வு தேர்வு எனப்படும் என்.எம்.எம்.எஸ் தேர்வில் சாதனை படைத்துள்ளார்

இவர் வெங்காடம்பட்டி டிரஸ்ட் இந்தியா பள்ளியில் அடிப்படைக்கல்வி பெற்றவர்.

சர்மிதாவின் தாய் லட்சுமி தந்தை வெற்றிவேல்முருகன் ஆகியோர் தங்களது மகளின் சாதனை குறித்து பெருமிதம் கொண்டனர்

மாணவி சர்மிதாவின் கல்விச்சாதனையை பாராட்டி
டிரஸ்ட் இந்தியா பள்ளி முதல்வர் சாந்தி திருமாறன் சால்வை அணிவித்து பாராட்டினார்

நிகழ்ச்சியில் ஆசிரிய பெருமக்கள் மாரிச்செல்வம் காளியம்மாள் முத்து செல்வி ஆகியோரும் கலந்துகொண்டு சர்மிதாவை பாராட்டினார்கள்

Please follow and like us:

You May Also Like

More From Author